நாடாளுமன்ற தேர்தலையொட்டி போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒரே நாளில் 99 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழகம் முழுவதும் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
திருச்சி மாநகர் அதன்படி, திருச்சி மின்வாரிய ஊழல் கண்காணிப்புபிரிவு துணை சூப்பிரண்டு பாஸ்கர் திருச்சி கண்டோன்மெண்ட் உதவி கமிஷனராகவும், திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி அரியலூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடத்துக்கும், மதுரை தல்லாகுளம் உதவி கமிஷனர் சம்பத் திருச்சி பொன்மலைக்கும், பொன்மலை உதவி கமிஷனர் காமராஜ் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்துக்கும், கோவை மாநகர குற்றப்பிரிவு-2 உதவி கமிஷனர் சரவணன், திருச்சி மாநகர குற்றப்பதிவேடுகள் கூடத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன் சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கும், திருவண்ணாமலை மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் துணைசூப்பிரண்டு பாலச்சந்தர் திருச்சி ஜீயபுரத்துக்கும், திருச்சி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை சூப்பிரண்டு சுப்பையா, திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசந்திரன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்துக்கும், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கும், அரியலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், அரியலூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் நாகை மாவட்டம் குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவிக்கும், கரூர் மாவட்டம் கரூர் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கும், திருவாரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர் கரூர் புறநகருக்கும், நீலகிரி மாவட்டம் கூடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் கரூர் நகர துணைபோலீஸ் சூப்பிரண்டாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பால்ராஜ், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.