“புதுமண தம்பதி” விஷம் குடித்து தற்கொலை!
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ளகோல்ஹாரி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பல்லவி (வயது 22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று பல்லவி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். இதில் சுயநினைவை இழந்து சுருண்டு விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பல்லவிக்கு உடனடியாக இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மனைவி இறந்ததில் மனவேதனைக்குஆளான விஜய் நேற்று முன்தினம் இரவு மனைவியின் உடல்அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று பூச்சி மருந்தைகுடித்து தற்கொலை செய்துகொண்டார்.