அரசியல் பேச தடை; ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி மறுப்பு!

பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர். மேலும் பிரதமரை வரவேற்க பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன், பாரிவேந்தர் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு சென்னையில் ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்குகிறார். அப்போது அவரை சந்திக்க அனுமதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் நேற்று முன்தினம் இரவு வரை அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிரதமர் மோடி விரதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா முடியும் வரை அரசியல் பேச மாட்டேன் என்று அவர் விரதம் உள்ளார். இத்னால் அவர் ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மோடியை வரவேற்கவும், வழி அனுப்பவும் மட்டும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial