9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!
சென்னை பெரம்பூர் பகு தியை சேர்ந்த 30 வயது பெண். இவர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;-தனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 3 பெண் குழந்தைகள் உள் ளது. 9 வயதான மூத்த மகள் 5ம் வகுப்பு படித்து வருகிறார். குடிபோதைக்கு அடி மையான தனது கணவர் கடந்த ஜனவரி 1ம் தேதி வீட் டில் எனது மகள் தனியாக இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி வெளியே சொல்லக் கூடாது என்றும் குழந்தையை மிரட்டிவைத்துள்ளார். நேற்றுமுன்தினம் என்னிடம் தந்தையின் செயல் குறித்து தெரிவித்துவிட்டார். எனவே கண வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், செம்பியம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலை யில், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவ ரது தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.