பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 21. 11 .22 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காலக்கெடு நீட்டிப்பு கோரியதற்கு இனங்க
வரும் 21. 11. 22 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
எனவே, கடலூர் மாவட்டத்தில் நெல் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இதுவரை திட்டத்தில் பதிவு செய்திடாத விவசாயிகள் அனைவரும் உடனடியாக
சிட்டா, அடங்கல் சான்று , ஆதார் ,வங்கி சேமிப்பு கணக்கு புத்தக எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள
இ- சேவை மையம் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது ,தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பதிவு செய்திட மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது .