“ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு” அரசாணை வெளியீடு!
தொடக்கக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று இனிவரும் காலங்களில் “மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும்”
என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள் (அரசாணை எண் 243).
இதனை வரவேற்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவைப் பிரதிநிதிகள் ஆகியோர் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியை நேரில் சந்தித்து மலர் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.