வெள்ள பாதிப்பு; “பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வேண்டும்” எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும். மிக்ஜாம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000 வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்புக்கான கரும்பை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என் முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.