பள்ளியில் அமைச்சர் ஆய்வு!
சென்னை மாவட்டம் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி நகராட்சி நந்திவரம் பகுதியில் அமைந்துள்ள காமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
விரிவான ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பசியாறிக்கொண்டிருந்த மாணவ மாணவிகளுடன் உரையாடி, முதலமைச்சர் காலை உணவுத் திட்ட மைய சமையலறையையும் பார்வையிட்டார். தொடர்ந்து தூய்மையான வகுப்பறைகளை பராமரித்து வரும் ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.