கருப்பு பேஜ் அணிந்து எதிர்ப்பு…..!

மாமூல் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையில் உள்ள கஸ்தூரி மெடிக்கல்ஸ் உரிமையாளர் வினோத் குமார் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாகவும், மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கடலூர் மாவட்ட மருத்துவர்கள் சங்க அறிவுறுத்தலின்படி கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியில் உள்ள மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்பு பேஜ் அணிந்தவாறு பணி மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கூறுகையில், ரவுடிகளின் மாமூல் தொல்லையால் மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு மேற்கொண்டு வியாபாரம் செய்து வரும் வணிகர்கள் மற்றும் மெடிக்கல் வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணி மேற்கொள்ளும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடி சட்ட நாடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில், போலீசார் அதற்கு அனுமதி மறுக்கவே இன்று ஒரு நாள் எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கருப்பு பேஜ் அணிந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial