நாடு முழுவதும் யுபிஐ ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு; ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் புது வசதி
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி பண பரிவர்த்தனையை குறைத்து இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இந்த முயற்சியாகவே தற்போது யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் நடைமுறை பரவலாக காணப்பட்டு உள்ளது. சாதாரண பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய மால்கள் வரை கையில் பணம் செலுத்தாமல் செல்போன் மூலமாகவே பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது. இந்த நிலையில் யுபிஐ மூலம் புது வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பின்வருவனவற்றில் பார்ப்போம்…
- ஓராண்டுக்கு மேல் செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்ய கூகுள் பே, Paytm செயலிகளுக்கு என்பிசிஐ அறிவுறுத்தல்.
- மோசடிகளை தடுக்க ₹2,000-க்கு மேல் செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- யுபிஐ பரிவர்த்தனையில் டேப் அண்ட் பே வசதியும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
- நாடு முழுவதும் யுபிஐ ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு; ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் புது வசதி.
- ப்ரீபெய்டு பேமண்ட் கருவி மூலம் ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்ததுள்ளது.