அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
வேல்முருகன் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் வாரியங்காவல் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார்.
கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், வாரியங்காவல் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சிகளில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும், மகளிர் சுயஉதவிக்குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி ஃ சொத்துவரி செலுத்துதல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மேலும், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது தேவைகளை தீர்மானமாக நிறைவேற்றி அதனை செயல்படுத்தி கொள்ளும் வாய்ப்பினை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளாகும். அதனை நினைவு கூறும் வகையில் உள்ளாட்சி தினத்தினை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில் இன்றையதினம் ஆண்டிமடம் ஒன்றியம், வாரியங்காவல் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தினை சிறப்பிக்கும் வகையில் கிராம சபைக் கூட்டமானது நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை சிறப்பிக்க வேண்டும். கொரோனா காலக்கட்டங்களிலும் மற்ற காலங்களிலும் தூய்மை பணியாளர்களின் சேவை மகத்தானது. கிராம ஊராட்சிகளிலும், மாவட்ட அளவிலும், மாநிலம் முழுவதும் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நாம் போற்றவேண்டும். மேலும், தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ள காரணத்தால் அது தொடர்பான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டு அவை கட்டி முடிக்கப்படாமல் உள்ள வீடுகளுக்கு அதனை கட்டி முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் இலக்குவன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழ்ச்செல்வன், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வாரியங்காவல் ஊராட்சி மன்றத்தலைவர் மணிசேகர் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதே போல் அரியலூர் மாவட்டம் இலையூர் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம சபை நடைபெற்றது இதில் 12 சுய குழுக்கள் சிறந்த குழுக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாட்டர் டேங்க் ஆபரேட்டர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார்
இதில் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் அறிவழகன் துணைத்தலைவர் பாலுசாமி மற்றும் ஊராட்சி செயலாளர் சிவகுமார் உறுப்பினர்கள் நித்தியா வீராசாமி. வசந்தா நீலமேகம். அருண்குமார் கொளஞ்சி. பூமாதேவி விஜயகாந்த் அபிராமி பிச்சை முத்து. செல்வ அரசு சாமிகண்ணு. செந்தாமரை ராமலிங்கம். நீலமேகம் ராசு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இதே போல் மருதூர் ஊராட்சியில்உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம_சபா கூட்டம் மருதூர் ஊராட்சி சேவை மைய கட்டிட வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்சரஸ்வதி பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அவர்கள் சிவ குருநாதன் அவர்கள் உள்ளாட்சி தின கிராமசபை கூட்ட பொருளை வாசித்தார் 6-வது வார்டு உறுப்பினர் சங்கர் அவர்கள் கலந்து கொண்டு வழிமொழிந்தார் இக்கூட்டத்தின் பற்றாளர் செல்வராஜ் ,கிராம
நிர்வாக அலுவலர் ஆறுமுகம், மற்றும் ,வார்டு உறுப்பினர்கள் சக்கரவர்த்தி, விஜயலட்சுமி கங்காசலம், சங்கீதா வேல்முருகன், சங்கர், அமுதா அன்பழகன், சுமதி செல்வம், மகாராஜன் ஊராட்சி செயலாளர் இரவி , செவிலியர் பவானி, வேளாண்மை துறை துணை அலுவலர் சிவரஞ்சனி மற்றும் கூட்டுறவுத்துறை சார்பாக வெற்றி மகளிர் சுயஉதவி குழு பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர், இறுதியாக கூட்ட முடிவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் சக்கரவர்த்திநன்றி கூறினார்.