ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் MLA க.சொ.க.கண்ணன் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து
02-08-2023, ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம்,
1).பிள்ளைபாளையம் ஊராட்சி, MGNREGS 2023 -2024 திட்டத்தின் கீழ், கொல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 7.43 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமையற்கூடம் கட்டிடத்தை திறந்து வைக்கும் பணி,
2)குண்டவெளி ஊராட்சி, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022 – 2023 கீழ் சொக்கலிங்கபுரம் சாலை முதல் ஒடப்பேரி சாலை வரை ரூபாய் 53.860 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி,
3).மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில்,அரசு பள்ளி கல்வித்துறை & அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 68 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி & சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23 கீழ் ரூபாய் 5.00 இலட்சம் மதிப்பீட்டில் பெஞ்ச்,டெஸ்க் ஆகியவற்றை
சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்து,வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் (வட்டார ஊராட்சி), ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர், வேளாண்மை அட்மா குழு தலைவர் இரா.மணிமாறன், மேலணிக்குழி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன்,உதவி பொறியாளர் குமார், பிள்ளைபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம்,பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.எம்.பொய்யாமொழி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எம்.ஜி.ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் ரேவதி சௌந்தர்ராஜன்,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பாலமுருகன்,கழக முன்னோடி சேட்டு (எ) பாலசுப்பிரமணியம்,மேலணிக்குழி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தேவதாஸ் மற்றும் கிளை கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T