பத்திரப்பதிவு.. வீடு, மனை வாங்க போறீங்களா.. அப்ப “இவைகள்” எல்லாம் மிக முக்கியம்.. நோட் பண்ணிக்குங்க.
பத்திரப்பதிவு.. வீடு, மனை வாங்க போறீங்களா.. அப்ப “இவைகள்” எல்லாம் மிக முக்கியம்.. நோட் பண்ணிக்குங்க.
28.07.2023
வீடு, மனை வாங்குவோர் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் சில உள்ளன.. இன்றைய சூழலில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்கவே பலரும் விருப்பம் தெரிவித்தாலும், ஆவணங்கள் என்பது மிகவும் முக்கியம். இதற்காகவே ரியல்எஸ்டேட் துறை நிபுணர்களின் ஆலோசனையை பெறவேண்டியது அவசியமாகும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் லட்சியமாகவே அமைந்துவிடுகிறது.. இந்த லட்சியத்தை அடைவதற்காக தங்கள் வாழ்நாளையே பணயம் வைக்க வேண்டியதாகிவிடுகிறது. லோன் எடுத்து வீடு கட்டினாலும், அந்த கடனை அடைத்து முடிக்கவே சிலருக்கு ஆயுசு முடிந்துவிடுகிறது. அப்படியே வீடு, மனைகள் வாங்கினாலும், சில விஷயங்களை கவனிக்க தவறிவிடுகிறார்கள். அந்தவகையில், ஒருசில முக்கியமான அம்சங்களை வீடு, மனை வாங்குபவர்கள் உற்று கவனித்து வாங்க வேண்டும். மனைக்கான சாலைகள் அளவு குறைந்தபட்ச அகலம் 23 அடியாக இருக்க வேண்டும்.
தாய் பத்திரம்: முக்கியமாக, வீடு, மனைகளை யாராவது விற்க வந்தால், சம்பந்தப்பட்ட வீட்டு மனையின் மூலப்பத்திரம் என்று சொல்லும் தாய் பத்திரத்தை முழுமையாக படித்து பார்த்து அறிய வேண்டும். அந்த வீடு, அல்லது மனைக்கு யாரெல்லாம் ஓனர்களாக இருந்திருக்கிறார்கள்? சொத்தின் உரிமையாளர், உண்மையான உரிமையாளரா? என்பதனை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக 30 வருடத்துக்கான வில்லங்க சான்றிதழை வாங்கி தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல, எந்த ஊரில் வீடு வாங்குகிறோமோ, அந்த ஊரின் அடிப்படை அமைப்பு என்ன? அங்கிருக்கும் அடிப்படை வசதிகள் என்ன? என்பதை சிலரிடமாவது விசாரிக்க வேண்டும்..
பீல்டு மேப்: அத்துடன், வாங்கப்போகும் வீடு, ஊரமைப்பு துறையால் முறையாக அங்கீகரிக்கப்பட்டதா? என்பதையும் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன, டிடிசிபி அங்கீகாரம் அளித்த வரைபடத்தின், ஜெராக்ஸ் காப்பியை வாங்கி, அதாவது, “பீல்டு மேப்” மற்றும் ‘அ பதிவேடு’ வாங்கி, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள வீடு எங்கே இருக்கிறது? அதை சுற்றிலும் உள்ள சாலைகள் என்னென்ன? அவைகளுக்கு முறையான சாலை இணைப்பு உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட மனையை சர்வேயர் மூலமாக 4 பக்கமும் அளந்து பார்ரக்க வேண்டும்.. காரணம், மூலப்பத்திரத்தில் அளவுகள் இருந்தாலும், சர்வே அளக்கும்போது, வேறு அளவு வந்துவிடும். அதேபோல மழைநீர் வடிகால்கள், பாதாள சாக்கடை திட்டம் போன்ற வசதிகளை ஏற்படுத்த உரிய வசதி இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். முக்கியமாக நீங்கள் வீடு வாங்கும்போது, அந்த பெயரில் மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் ஏதாவது நிலுவை இருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சேபம்: ஒருவேளை, வாங்கப்போகும் மனையின் ஆவணங்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால், அந்த ஓனரின் அனுமதியுடன் சொத்து வாங்குவது பற்றியும் அதில் ஆட்சேபம் இருப்பவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தெரிவிக்கும்படியும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யலாம். அதேபோல, சொத்தினை கிரயம் வாங்கும்போது சொத்தின் ஓனர் உயிருடன் இல்லாவிட்டால், அவரது இறப்பு சான்றிதழ், மற்றும் அவரது வாரிசுகள் சான்று மிகவும் முக்கியம். அடுக்குமாடி குடியிருப்பு என்றால், அந்த அடுக்குமாடியில் எத்தனை மாடிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது, இப்போது எத்ததனை அடுக்குகள் கட்டப்பட்டிருக்கிறது? என்பதை கட்டாயம் பார்க்க வேண்டும்.. அதேபோல, நீங்க வாங்கப்போகும் வீட்டிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய வசதிகள் எல்லாம் அருகிலேயே உள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T