என்எல்சி நிலத்துறை அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு 1989-ம் ஆண்டு வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க கோரி என்எல்சி நிலத்துறை அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது இந்த நிறுவனத்திற்கு கடந்த 1989-ம் ஆண்டுக்கு முன்பு வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்ப த்திற்கு இன்று வரையில் வேலை வழங்கவில்லை அவர்களுக்கு வேலை வழங்க கோரியும்,என்எல்சி நிறுவனம் மூன்றாண்டு பயிற்சி வழங்குவதற்காக விண்ணப்பம் வெளியிட்டு இருக்கிறது இதில் 1989-ம் ஆண்டு முன்பு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் கலந்து கொள்ள வழிவகை செய்ய கோரியும்,நெய்வேலி என்எல்சியில் வேலை செய்யும் NON AMC மற்றும் SHORTERM பணிகளில் வேலை செய்தவர்களை டெண்டர் முடிந்து விட்டது மீண்டும் அழைக்கும் போது வாருங்கள் என்று பல தொழிலாளர்களை இடைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு மீண்டும் உடனடியாக வேலை வழங்க கோரியும்,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நெய்வேலி என்எல்சி நிலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.