வடலூரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து சம்பவ இடத்திலேயே இருவர் பலி மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி
வடலூரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து சம்பவ இடத்திலேயே இருவர் பலி மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி
கடலூர், மாவட்டம்
வடலூரில் நான்கு முனை சந்திப்பில் இருந்து பண்ருட்டி, சென்னை சாலையில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது இதில் காட்டுமன்னார்கோயில் விநாயகர் கோயில் தெரு பகுதியில் இருந்து வடலூரில் நடைபெற்ற டூவீலர் மெக்கானிக் சங்க கூட்டத்திற்கு வந்த சுப்ரமணியன் மகன் பாரி (42)என்பவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருடன் காட்டுமன்னார்கோயில் பகுதியில் இருந்து வந்த, ஈ.சுரேஷ் .கே சுரேஷ், ஆபத்தாரணாபுரம் கணேசன் மற்றும் இதேபோல் நடந்து சென்ற ஊர்பேர் தெரியாத (சுமார்60 வயது)மூதாட்டி பலத்த அடிப்பட்டஒருவரும் ஆவார்,குறிஞ்சிப்பாடி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்,மேலும் அடிப்பட்ட காட்டுமன்னார்கோயில் பகுதியைச்சேர்ந்த கே.சுரேஷ் மற்றும் ஈ.சுரேஷ் , ஆபத்தாரணபுரம் ரைஸ்மில் தெருபாலன் மகன் கணேசன் இவர்கள் மூவரும் பலத்த காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சாலையில் நடந்து செல்லும் பொழுது லாரி மோதி இருவர் உயிரிழந்து மேலும் 3 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்