கடலூர் அருக சிலிண்டர் வெடித்து 4 வீடு எரிந்தது, 3 பேர் காயம்
- கடலூர் அருக சிலிண்டர் வெடித்து 4 வீடு எரிந்தது, 3 பேர் காயம்
கடலூர், மாவட்டம்,குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஆயிக்குப்பம் அம்பேத்கர் நகர்,சேர்ந்தஆறுமுகம் மகன்கள் ரமேஷ் (40) சுரேஷ் (35)ஆறுமுகம் மனைவி ராதா (70)ராமச்சந்திரன் மனைவிநாவம்மாள்(60) ஆகிய 4 பேர்களின் கூரை வீடுகள் அடுத்தடுத்து உள்ளது இதில் ரமேஷ்
என்பவர் வீட்டில் அருகே சென்ற மின்கம்பியில் காற்றினால் ஏற்பட்ட உரசல்காரணமாக தீப்பொறி ஏற்பட்டது, அந்த தீப்பொறி வீட்டின் கூரையில் பட்டு எரிந்ததால்
ரமேஷ்வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில், அடுத்தடுத்து இருந்தநான்கு பேர் வீடுகளிலும் தீ பரவியது இதில் வீடு
முழுவதும் எரிந்துவிட்டது.
இதில் ரமேஷ் மகன்ஆதவன் (7) முகத்திலும், ஆறுமுகம் மனைவிராதாவுக்கு
நெற்றியிலும்,ரமேஷ் மனைவிசரஸ்வதி தலையிலும் காயம் ஏற்பட்டதால்
இவர்களை குள்ளஞ்சாவடி தனியார் மருத்துவமனையில் முதலுதவிசிகிச்சை அளித்தனர், பின்னர் மேல்சிகிச்சைக்காக
கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குள்ளன் சாவடி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்