நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினார்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பாரத பிரதமர் அறிவித்த ரோஸ்கர் மேளா திட்டத்தின் படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் செய்யும் வேலைக்கு தகுந்தார் போல் பணி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து பல்வேறு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதன் நிலையில் இதே கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லாவிடில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி இன்றைய தினம் நெய்வேலி பெரியார் சதுக்கத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் என்எல்சி நிறுவன அதிகாரிகளிடம் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது இதை அடுத்து இன்றிலிருந்து 14 நாட்களுக்குள்ளாக என்எல்சி நிறுவனம் தொழிற்சங்கருடன் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்