கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை-வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் லஞ்சம் வாங்க உதவிய புரோக்கர் இருவர் கைது.
கடலூர் கூத்தப்பாக்கம் செல்வராஜ் என்பவரது கழிவுநீர் அகற்றும் வாகனம் பெயர் மாற்றம் FC-க்காக ₹ 5500 லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் மற்றும் ஆய்வாளர்கள் திருவேங்கடம் , அன்பழகன் ஆகியோர் தலைமையில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் மற்றும் புரோக்கர் சிவாவிடம் விசாரணை.வெங்கடாஜலபதி தனது நண்பர் செல்வராஜ் வாங்கிய கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு பெயர் மாற்றம் செய்ய கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வந்து ஆர்.டி.ஓ.விடம் கேட்டபோது அதற்கு ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதால் வெங்கடாசலபதி லஞ்ச ஒழிப்புத் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் மற்றும் லஞ்சம் வாங்க உதவிய புரோக்கர் சிவா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.