கடலூர்வாக்காளர் பட்டியல் திருத்தம் -3, நாட்கள் சிறப்பு முகாம், கலெக்டர் தொடங்கி வைத்த விழிப்புணர்வு பேரணி
கடலூர்வாக்காளர் பட்டியல் திருத்தம் -3, நாட்கள் சிறப்பு முகாம், கலெக்டர் தொடங்கி வைத்த விழிப்புணர்வு பேரணி..
கடலூர் நகர அரங்கம் அருகில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.01.01.2027-ஐ தகுதி நாளாக கொண்டு 12.11.2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பெயர் சரிபார்ப்பு, புதிய வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக *21.11.2026, 22.11.2026 மற்றும் 29.11.2026* ஆகிய 3 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்தார்.நகர அரங்கம் முதல் செம்மண்டலம் தொழில்நுட்ப கல்லூரி வரை மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா தேர்தல் வட்டாட்சியர் சுரேஷ்குமார் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி வட்டாட்சியர் ராஜேஷ் பாபு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.