மனுநீதி நாள் முகாமில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
மனுநீதி நாள் முகாமில்
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பயனாளிகளுக்கு
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு கிராமத்தில் மாவட்ட
ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில்
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் விழா
பேரூரையாற்றினர் 635 பயனாளிகளுக்கு ரூ.2,58,59,632/- மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்.
இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.9,84,000/-மதிப்பீட்டில்
உதவித்தொகைக்கான ஆணையினையும், இலவச மனைப்பட்டா 213 பயனாளிகளுக்கு ரூ.31,58,558/-
மதிப்பீட்டிலும், 171 பயனாளிகளுக்கு இ-பட்டா மற்றும் 12 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான
ஆணைகளும் என ரூ.30,29,400/- மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்
இலவச வீட்டு மனைப்பட்டா 51 பயனாளிகளுக்கு ரூ.52,83,600/-மதிப்பீட்டிலும், குடிமைப்பொருள் மூலம் 15
பயனாளிகளுக்கு (ஸ்மார்ட் கார்டு) குடும்ப அட்டைகள், மாற்றுதிறனாளித் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு
இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ரூ.13,61,000/- மதிப்பீட்டிலும், மாவட்ட பார்வையிழப்பு
தடுப்பு சங்கம் சார்பில் 6 பயனாளிகளுக்கு கண்கண்ணாடி ரூ.3,000/- மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் ரூ.16,650/- மதிப்பீட்டிலும்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தையல்
இயந்திரம், சலவைப்பெட்டி என ரூ.31,794/- மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் 11 பயனாளிகளுக்கு டிராக்டர்,
கறவை மாடுகள் ரூ.81,73,876/- மதிப்பீட்டிலும், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் சார்பில் 10
பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு பை ரூ.20,000/- மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறை
சார்பில் 10 பயனாளிகளுக்கு டிராக்டர்,பவர் டில்லர் ரூ. 35,70,000/- மதிப்பீட்டிலும், வேளாண்மை துறை
சார்பில் 6 பயனாளிகளுக்கு மருந்து தெளிப்பான், பிளாக் கிராம் மினி கிட், தார்பாலின் ரூ.65,184/-
மதிப்பீட்டிலும், கால்நடைத் துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ரூ.2,600/-
மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு
சமுதாய முதலீட்டு நிதி ரூ.100,000/- மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 635 பயனாளிகளுக்கு ரூ.2,58,59,632/-
மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள்
வழங்கினார்.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,
மனுநீதி நாள் முகாம்களில் மக்களின் குறைகளை போக்குவதற்கு அவர்களின் பகுதிகளிலேயே
நேரடியாக சென்று அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் மக்கள் நல திட்டங்கள் குறித்து துறை
சார்ந்த அலுவலர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று
தகுந்த தீர்வு காண்பதற்கு ஏதுவாக இதுபோன்ற குறை தீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு துறைகளின் வாயிலாக பல்வேறு திட்டங்களை
செயல்படுத்தி வருகிறார்கள். அவ்வகையில அரசு பள்ளிகளில் பயின்ற பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி
பயில உதவித்தொகை பெறுவதற்கு புதுமைப்பெண் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்,
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு வீடு தேடி சிகிச்சை அளிக்கும் வகையில்
மக்களை தேடி மருத்துவம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செம்மையாக செயல்படுத்தப்பட்டு, அனைத்து
தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர். அரசு பெண்களுக்கு அளித்து வரும் இடஒதுக்கீட்டினால்
தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி
முன்னேற்றமடைந்து வருகின்றனர்.
இம்முகாமில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, சுகாதரத் துறை, சமூகநலத் துறை,
மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் என பல்வேறு துறைகளின் வாயிலாக
செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் கண்காட்சி அரங்குகள்
அமைக்கப்பட்டு இருந்தது
இம்முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை வேளாண்மை உழவர் நலத்துறை
அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த
அலுவலர்களுக்கு அனுப்பிவைத்து தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு
காணப்படும். எனவே இதுபோன்ற முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கு பெற்று
தங்களது தேவைகள் குறித்து மனு செய்து அதற்குரிய தீர்வினை பெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வினில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் அவர்கள்,
கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குநர் லி.மதுபாலன், அவர்கள் மற்றும் பல்வேறு துறை
அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.