Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

கட்டுரைகள்செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வடலூரில் நில அளவீடு30 ஏக்கர் நிலங்களின் எல்லைகளை வரையறுக்கும் பணி தீவிரம் – ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய 4 நாட்கள் கள ஆய்வு

By tamilnewsmedia0
November 2, 2026 2 Min Read
0

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வடலூரில் நில அளவீடு30 ஏக்கர் நிலங்களின் எல்லைகளை வரையறுக்கும் பணி தீவிரம் – ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய 4 நாட்கள் கள ஆய்வு

கடலூர் மாவட்டம்
வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் அமைந்துள்ள சத்திய ஞானசபை, உலகெங்கும் உள்ள வள்ளலார் பக்தர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் நடைபெறும் ஜோதி தரிசன விழாவிலும், மாதந்தோறும் நடைபெறும் மாதப் பூச விழாவிலும் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்திற்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலங்களின் எல்லைகளை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களைக் கண்டறியும் பணியில் இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கடந்த ஆட்சியில் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட வள்ளலார் சர்வதேச மையத் திட்டம் தொடர்பாக பெருவெளியின் ஆன்மிக மற்றும் இயற்கைச் சூழல் பாதிக்கப்படும் எனக் கூறி உள்ளூர் மக்கள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு நூலகம், யோகசாலை, சித்த மருத்துவமனை உள்ளிட்ட மாற்றுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

இத்தகைய சூழலில், தெய்வ நிலையத்திற்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்து அவற்றின் உண்மையான எல்லைகளையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் தெய்வ நிலைய நிலங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நவம்பர் 2 முதல் 5-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் இப்பணி நடைபெறுகிறது. காவல்துறை பாதுகாப்புடன் நடைபெறும் கள ஆய்வில், நிலங்களின் தற்போதைய எல்லைகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களின் பரப்பளவு மற்றும் அவற்றின் தன்மை ஆகியவை கணக்கிடப்படுகின்றன.

மேலும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் உள்ள நில உரிமை ஆவணங்கள், வருவாய்த்துறை பதிவேடுகள் ஆகியவற்றை ஒப்பிட்டுச் சரிபார்த்து, நிலங்களின் உரிமை மற்றும் வகைப்பாட்டை உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்களுக்கு உள்ளானவர்களிடம் உரிய ஆவணங்களைப் பெற்று, அவர்களுக்கு விசாரணை வாய்ப்பளிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நில அளவீடு மற்றும் விசாரணையின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஆய்வின் மூலம் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களின் அளவு, ஏற்கெனவே அகற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆக்கிரமிப்புகளின் நிலை மற்றும் மீதமுள்ள நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை கணக்கிடும் பணி துவங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

கூவத்தூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

Next

வடலூரில் டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் போராட்டக்குழு கூட்டம்புதிய மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme