Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

செய்திகள்

வடலூரில் டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் போராட்டக்குழு கூட்டம்புதிய மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு

By tamilnewsmedia0
November 2, 2026 1 Min Read
0

வடலூரில் டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் போராட்டக்குழு கூட்டம்புதிய மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு

கடலூர் மாவட்ட அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் போராட்டக்குழு கூட்டம் வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ்பாபு, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் அல்லிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் ஆலோசகர் சரவணன்கலந்து கொண்டு பேசினார் இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், டாஸ்மாக் விற்பனையாளர் சங்கம், டாஸ்மாக் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அண்ணா தொழிற்சங்கம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்திருந்தன.கூட்டத்தில் கடலூர் மாவட்ட அனைத்து சங்கங்களின் போராட்டக்குழுவுக்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக சுரேஷ்பாபு,செயலாளராக அல்லிமுத்த, பொருளாளராக தங்க தக்ஷிணாமூர்த்தியும், துணைத் தலைவராக குமாரும், ஒருங்கிணைப்பாளராக ஜெயராமனும், துணை ஒருங்கிணைப்பாளராக பாலசுப்பிரமணியனும், துணைச் செயலாளராக ஜான் பாஷாவும் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும், மாநில அளவில் கூட்டுக்குழு அறிவிக்கும் அனைத்து போராட்டங்களையும் கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்து சிறப்பாகவும் தீவிரமாகவும் நடத்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் உதயசங்கர் நன்றி கூறினார்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வடலூரில் நில அளவீடு30 ஏக்கர் நிலங்களின் எல்லைகளை வரையறுக்கும் பணி தீவிரம் – ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய 4 நாட்கள் கள ஆய்வு

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme