Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

ஆன்மீகம்செய்திகள்

தூத்துக்குடியில் தசரா திருவிழா அம்மன்கள் சப்பர பவனி கோலாகலம் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

By tamilnewsmedia0
October 23, 2026 2 Min Read
0

தூத்துக்குடியில் தசரா திருவிழா அம்மன்கள் சப்பர பவனி கோலாகலம் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி தசரா திருவிழாவை முன்னிட்டு அனைத்து அம்மன்களின் சப்பர பவனியும், சங்கரராமேசுவரர் கோவில் முன்பு எதிர்சேவையும் நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் கடந்த 10 நாட்களாக தசரா திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு பல்வேறு அம்மன்களான பத்திரகாளியம்மன், முத்தாரம்மன், உச்சினிமகாளியம்மன், சந்தனமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சப்பரங்களின் முன்பு சிறப்பு வாத்தியங்கள், நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்களும் நடைபெற்றன.
இந்து முன்னணி சப்பர பவனி கமிட்டி சார்பில் 44வது ஆண்டு அனைத்து அம்மன் சப்பரங்களின் பேரணி நடைபெற்றது. அனைத்து அம்பாள்களின் சப்பர பேரணி மற்றும் மாவிளக்கு ஊர்வலம் கீழூர் சக்தி விநாயகர் ஆலயம் முன்பு இருந்து தொடங்கியது. பேரணி முக்கிய வீதிகள் வழியாக சங்கர ராமேசுவரர் கோவில் முன்பு வந்தடைந்தது. அங்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் ரிஷப வாகனத்தில் கோவில் முன்பு எழுந்தருளி காட்சி கொடுத்தார். அப்போது அனைத்து அம்பாள்களுக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து, பட்டுசாத்தி எதிர் சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டிஎம்பி இயக்குநா் அரவிந்த்குமாா் தலைமை வகித்தாா். அறங்காவலா் குழு தலைவர் கந்தசாமி, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா் விவேகம் ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். இசக்கி முத்துக்குமாா் வரவேற்புரையாற்றினாா்.
சிறப்பு விருந்தினராக மேயா் ஜெகன் பொியசாமி கலந்து கொண்டு அனைத்து கோவில் நிா்வாகிகளை கெளரவித்து அம்மனுக்கு பட்டு சாத்தி சாமிதாிசனம் செய்தாா்.
நிகழ்ச்சியில் அனைத்து அம்பாள்களின் சப்பரபேரணி கமிட்டி ஓருங்கிணைப்பாளா் மாயகூத்தன், தலைவா் தனபாலன், அமைப்பாளா் சிவக்குமாா், செயலாளர் வன்னியராஜன், துணைத்தலைவா்கள் ராகவேந்திரா மாதவன், பொருளாளா் ஆதிநாத ஆழ்வாா் துணைச்செயலாளர்கள் காளிராஜா, குருமூா்த்தி துணைப்பொருளாளா் சக்திவேல், மாவிளக்கு பேரணிகமிட்டி தலைவா் கனகராஜ் செயலாளா் பாலசேகா், பொருளாளா் ஜெயகிருஷ்ணன், துணைத்தலைவா்கள் செல்லப்பா, கோவில்ராஜ், கருப்பசாமி, துணை செயலாளா்கள் சங்கா்ராஜ் தாளமுத்து துணை பொருளாளா் மதிராஜன், பிஜேபி மாவட்ட செயலாளர் ராஜேஷ், பொருளாளா் வக்கீல் சண்முகசுந்தரம், திமுக பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், திமுக வட்டச்செயலாளா்கள் ரவீந்திரன், பொன்ராஜ், முன்னாள் அறங்காவல குழு தலைவர் தங்கமாாியப்பன், சட்ட ஆலோசகா் செல்வராஜ், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme