மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று புரட்டாசி மாத நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா உற்சவ விழா நேற்று தொடங்கி யது.இந்த விழா வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.
நவராத்திரி திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங் காரம் செய்யப்பட்டு கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெ றும். அந்த * நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது.
கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குதான் அர்ச்சனைகள். நவராத்திரி விழாவை
யொட்டி கொலு மண்டபம், மீனாட்சி அம்மன் சன்னதி முழுவதும் வண்ண, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்
பட்டிருந்தது
திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். அதன்படி முதல் நாளான நேற்று மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
இன்று (திங்கட்கிழமை) அர்த்த நாரீசுவரர் அலங்காரமும், நாளை கோலாட்டம்,
14-ந் தேதி பட்டாபி ஷேக திருக்கோலம், 15-ந் தேதி தபசு திருக்கோலம், 16-ந் தேதி ஊஞ்சல், 17-ந் தேதி முத்தங்கி சேவை, 18-ந் தேதி மகிஷா சுரமர்த்தினி, 19-ந் தேதி விழாவை யொட்டி சிவ பூஜை செய்யும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.
நவராத்திரியை யொட்டி சுவாமி சன்னதி 2-ம் பிரகா ரம் முக்குறுணி விநாயகர் சன்னதி யில் இருந்து கொலு அலங்கார கண் காட்சி அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 11 அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு சுவாமியின் சிலைகள், அம்மன் அவதாரம், திருவிளை
யாடல் புராண கதைகள், முருகன், விநாயகர்,அஷ்டலட்சுமிகள் உள்ளிட்ட பல்வேறு சுவாமி சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.
மேலும் கோபுரங்கள், பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் மின்விளக்கு
களால் அலங்கரிக்கப்
பட்டுள்ளன.