Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

செய்திகள்

டெங்கு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு

By tamilnewsmedia0
September 29, 2026 1 Min Read
0

டெங்கு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு


தமிழக முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் அபாயம் உள்ளது இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் ,பாலச்சந்தர், வடலூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வடலூர் நகராட்சி பகுதி, வானவில் நகரில் ஆய்வு மேற்கொண்டார். குடியிருப்புப்பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளை பார்வையிட்டு, அவற்றை உடனடியாக அகற்றவும், வீடு வீடாக கொசுப்புழு ஆய்வு மேற்கொண்டு கொசு உற்பத்தி மூலங்களை கண்டறிந்து அகற்றவும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகவும், ஆலோசனை வழங்கப்பட்டது.ஆய்வின்போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் லக்ஷ்மண நாராயணன், திருமாலன்,சுகாதார செவிலியர்கள் மருத்துவ துறை, ஊழியர்கள் உடன் இருந்தார்கள்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

கடலூர் சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரால் , நொச்சிக்காடு, நடுத்திட்டு, தியாக வல்லி கிராமங்களில் விளைநிலங்களை ஆர்ஜிதம் செய்வதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme