Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

செய்திகள்

கடலூர் சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரால் , நொச்சிக்காடு, நடுத்திட்டு, தியாக வல்லி கிராமங்களில் விளைநிலங்களை ஆர்ஜிதம் செய்வதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்

By tamilnewsmedia0
September 28, 2026 1 Min Read
0

கடலூர் சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரால் , நொச்சிக்காடு, நடுத்திட்டு, தியாக வல்லி கிராமங்களில் விளைநிலங்களை ஆர்ஜிதம் செய்வதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்

தமிழ் நாடு புரட்சிகர சோசலிஸ்ட்கட்சி யின் கடலூர் மாவட்டக்குழுக் கூட்டம் வடலூர் கட்சி அலுவலகத்தில் திட்டக்குடி வட்டச் செயலாளர் தோழர் சந்திரகாசி தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தோழர் சி கலியமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பட்டுசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் எம் ஜி ராமச்சந்திரன், வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். மாவட்டத் துணைச் செயலாளர் தோழர்பாலகிருஷ்ணன்,மாவட்ட குழு உறுப்பினர் தோழர் கஜேந்திரன், சிதம்பரம் வட்டச் செயலாளர் தோழர் .உதயக்குமார், வேப்பூர் வட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், புவனகிரி வட்டச் செயலாளர் தோழர் குணசேகரன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர் அந்தோணி ராஜ் தோழர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டு விவாதத்தில் பங்கெடுத்து பேசினர் .கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் தமிழ்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டை சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கடலூர் சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரால் அந்தப் பகுதியில் உள்ள குடி காடு, நொச்சிக்காடு, படுத்திட்டு, தியாக வல்லி கிராமங்களில் விளைநிலங்களை ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் மாவட்டம் தழுவிய அளவில் கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி இந்திரா நகர் மற்றும் வேப்பூர் ஆகிய ஏழு மையங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

காட்டுமன்னார்கோயில்,அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme