Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

அரசியல்செய்திகள்

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

By tamilnewsmedia0
September 26, 2026 1 Min Read
0

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை அடைந்த நிலையில், அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அதேபோல், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகினர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அந்த வகையில் இன்று (செப்.25) 11 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட 15 பேருக்கு தவெகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த வகையில், திமுக கொள்கைபரப்புச்செயலாளர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் மகன் முனைவர் சந்தீப் ஆனந்த் (49), தவெக துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க மாணவர்களுக்கு வாய்பாடு

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme