Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

செய்திகள்

விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க மாணவர்களுக்கு வாய்பாடு

By tamilnewsmedia0
September 25, 2026 1 Min Read
0

விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க மாணவர்களுக்கு வாய்பாடு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பஜார் வீதி, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி (மேற்கு) மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க அரிச்சுவடி வாய்ப்பாடு (எண்சுவடி) வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை(பொ) சுஜாதா தலைமை தாங்கினார். மாவட்ட எக்ஸ்னோரா நிர்வாகி மலர் சாதிக் முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் மஹாவீர் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் பங்கேற்று, காலாண்டு விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும் என்றும், ஏரி, குளம், குட்டைகளில் தனியாக சென்று குளிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும் மாணவர்களுக்கு அரிச்சுவடி வாய்பாடு (எண்சுவடி) வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் திருக்குறள், ஆத்திசூடி ஒப்பித்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் சுவாமி கோவிலுக்கு புதிய ஆண் யானை வருகை சிறப்பு பூஜைகள்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme