Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

ஆன்மீகம்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் சுவாமி கோவிலுக்கு புதிய ஆண் யானை வருகை சிறப்பு பூஜைகள்

By tamilnewsmedia0
September 25, 2026 2 Min Read
0

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் சுவாமி கோவிலுக்கு புதிய ஆண் யானை வருகை சிறப்பு பூஜைகள் செய்து பழங்கள் கொடுத்து முத்தையா என திருநாமம் சூட்டி தருமபுரம் ஆதீனம் வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயில் நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய முதன்மையான தலமாக விளங்குகிறது. அறுபடை வீடுகளுக்கு இணையான முருகன் ஸ்தலமாக போற்றப்படும் இக்கோயிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன்,தன்வந்திரி ஆகிய சுவாமிகள்,தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி அம்மனை வழிபாடு செய்து கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் திரு சாந்துருண்டை எனும் தீர்த்த மண் உருண்டையை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது கோயில் ஐதீகம்.கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிந்து வழிபாடு செய்து பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த தையல்நாயகி என்ற யானை கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் மதம் பிடித்ததால் டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் விடப்பட்டு அங்கு நோய்வாய்ப்பட்டு இறந்தது. இந்நிலையில் கோயிலுக்கு புதிய யானையை கொண்டு வர வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வனத்துறையின் அனுமதி பெற்று அசாமில் இருந்து 13 வயது ஆண் யானை சென்னை சேவா டிரஸ்ட் மூலம் வாங்கப்பட்டு இன்று கோயிலை வந்தடைந்தது. தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் யானையை வரவேற்று சிறப்பு கஜ பூஜைகள் செய்து யானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் யானைக்கு முத்தையா என திருநாமம் சூட்டி அதன் காதில் மூன்று முறை கூறினார். பின்னர் பழங்கள் கொடுத்து தருமை ஆதீனம் வழிபாடு செய்தார். பக்தர்கள் புதிதாக வந்த யானையை ஆர்வமுடன் பார்வையிட்டு ஆசீர்வாதம் பெற்று யானையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.இதில் கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் வாமிகள் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயில் நிர்வாகி செந்தில்சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான், வனவர் ஆனந்தீஸ்வரர், மாவட்ட வளர்ப்பு யானைகள் குழு உறுப்பினர் உறுப்பினர் டாக்டர் சிவகணேசன், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புதிய யானை கொண்டு வரப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளியில் கராத்தே பெல்ட் வழங்கும் விழா

Next

விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க மாணவர்களுக்கு வாய்பாடு

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme