சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; ஏப்ரல் 17 முதல் பக்தர்களுக்கு அனுமதி.
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் ஏப். 20 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதனை முன்னிட்டு தினமும் காலை 7:00மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இரவில் கோயிலில் தங்க அனுமதி கிடையாது என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளை கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் வழக்கம்போல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிலளிமுன்அனுப்பு
|