வடலூர் ஓ பி ஆர் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் தின விழா, ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்
வடலூர் ஓ பி ஆர் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் தின விழா, ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்
வடலூர், சுத்தசன்மார்க்க நிலையத்தில் ஓ.பி.ஆர் நிறுவனங்களின் சார்பாக டாக்டர். ராதாகிருஷணன் பிறந்த நாளை ஆசிரியர் தின விழாவாக செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டு தோரும் கொண்டாடிவருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆசிரியர் தின விழா அருட்செல்வர் கலையரங்கத்தில் நடைபெற்றது . விழாவிற்கு நிலையத்தின் செயல் இயக்குநர் செ.ராஜாவெங்கடேசன் தலைமைஏற்று தேசியக்கொடியை ஏற்றிவைத்து சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து ஓ.வி.ஆர். கல்வி நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் லதாராஜாவெங்கடேசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஓ.பி.ஆர். கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள் உட்பட பலரும் விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், பள்ளி செயல் இயக்குநர் ‘ மற்றும்பள்ளி கல்லூரி நிர்வாக அலுவலர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர், வரவேற்புரை, ஆசிரியர்தின உரை ஆகியவற்றை ஓ.பி.ஆர். கல்வி நிறுவன மாணவிகள் செய்தனர். இறுதியாக மேல்நிலைப்பள்ளி மாணவி நன்றி கூறினார்