வடலூரில் அம்பேத்கர், பெரியார் சிலைகளை மீண்டும் நிறுவக் கோரி வி.சி.க. உண்ணாவிரதப் போராட்டம்
டலூர், மாவவட்டம்
வடலூர் பேருந்து நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் சிலைகளை மீண்டும் உரிய மரியாதையுடன் உடனடியாக நிறுவ வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு வடலூர் நகர வடக்கு அமைப்பின் பொருளாளர் கட்டாக் பாலா தலைமை தாங்கினார்.
வடலூர் நான்கு முனைச் சந்திப்புப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றபோது, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் முன்னதாக அகற்றப்பட்டன.
இந்நிலையில், அகற்றப்பட்ட இரு தலைவர்களின் சிலைகளையும் மீண்டும் வடலூர் பேருந்து நிலையத்தில் உரிய மரியாதையுடன் உடனடியாக நிறுவ வேண்டும் எனப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வி.சி.க. மாவட்டத் துணைச் செயலாளர் கண்ணன் இதில் கலந்துகொண்டு, போராட்டக்காரர்களுக்குப் பழரசம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
இதில், மாவட்ட நியமனச் செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை நகரச் செயலாளர் சிவகுரு, மகளிர் அணி மேற்கு ஒன்றியச் செயலாளர் சுசீலா காமராஜ், நில உரிமை மீட்பு அமைப்பாளர் ஆறுமுகம், ஹரி, சுந்தர்ராஜ், இளங்கோவன், சஞ்சய், வெண்ணிலா, ராணி, சத்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அகற்றப்பட்ட சிலைகளை விரைந்து மீண்டும் நிறுவாவிட்டால், அடுத்தகட்டமாகப் மிகப்பெரிய அளவிலான தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
க