வள்ளலார் வாழ்ந்த மண்ணில்; வேதனையில் விவசாயிகள்: கருங்குழியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் முட்டைகள் தேங்கி நிற்கும் அவலம்
வள்ளலார் மண்ணில் வேதனையில் விவசாயிகள்: கருங்குழியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரிக்கைபத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் முட்டைகள் தேங்கி நிற்கும் அவலம்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று ஜீவகாருண்ய ஒழுக்கத்தை உலகிற்கு உணர்த்திய புனிதத் துறவி வள்ளலார் வாழ்ந்து, தண்ணீரால் விளக்கேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பூமி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கருங்குழி கிராமம். ஆன்மீகச் சிறப்புமிக்க இக்கிராமத்தில், தற்போதைய குறுவை சாகுபடிக்குப் பின் விளைவிக்கப்பட்ட நெல்லை விற்பனை செய்ய வழியின்றி விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.தேங்கிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்இப்பகுதியில் விவசாயத்தையே முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். கருங்குழி, மேட்டுக்குப்பம், கோட்டகம், நையினார்குப்பம், அரங்கமங்கலம், பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர்.தற்போது குறுவை நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நெல்லை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.வழக்கமாக ஆண்டுதோறும் கருங்குழி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அறுவடை முடிந்து நாட்கள் பல ஆகியும் இதுவரை கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால், கொள்முதல் வளாக திறந்தவெளியில் சுமார் 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குவிக்கப்பட்டு தேங்கிக் கிடக்கின்றன. மேலும் தினமும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் வந்தவண்ணம் உள்ளன.மழையில் நனையும் அபாயமும் இடைத்தரகர்களின் சுரண்டலும்அறுவடை செய்யப்பட்ட நெல் திறந்தவெளியில் தேங்கிக் கிடப்பதால், திடீர் மழை மற்றும் கடும் வெயில் காரணமாக நெல் மணிகள் முளைப்பது, நிறம் மாறுவது போன்ற சேதங்கள் ஏற்படுகின்றன.அரசு கொள்முதல் நிலையம் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, தனியார் வியாபாரிகளும் இடைத்தரகர்களும் விவசாயிகளிடமிருந்து நெல்லை அடிமாட்டு விலைக்குக் கேட்கும் அவல நிலை உருவாகியுள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள், நெல்லைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வசதியின்றியும், உரிய விலை கிடைக்காமலும் கடும் கடனாளி ஆகும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் இது குறித்து பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லைவிவசாயிகளின் கோரிக்கைகள்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கருங்குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகள் மழையில் நனையாதவாறு போதுமான தார்ப்பாய்களும், விரைவாக எடையிடும் எந்திரங்களும் அமைத்துத் தரப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தாமதமின்றி நேரடியாகச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து நெல்லைக் கொள்முதல் செய்யாவிட்டால், சுற்றியுள்ள கிராம விவசாயிகளை ஒன்றிணைத்துப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.