வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய செயலாளரும் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான டாக்டர் செல்வராஜ், படத்திறப்பு நிகழ்ச்சி,
வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய செயலாளரும் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான டாக்டர் செல்வராஜ், படத்திறப்பு விழா
வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய செயலாளரும் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான டாக்டர், ஆர். செல்வராஜ், கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி மறைந்தார், இதனை ஒட்டி அவருடைய படத்திறப்பு விழா நேற்று அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம். கலையரங்கில் சுத்த சன்மார்க்கத்தின் நிலையத்தின் துணைத்தலைவர் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது,ஓபிஆர் கல்வி நிறுவனங்களில் நிர்வாக அலுவலர் லதா ராஜா வெங்கடேசன்,அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சுத்த சன்மார்க்க நிலையம்மற்றும் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் மறைந்த செல்வராஜ் அவர்களின் உருவப் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்,தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத், தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஜெயராஜமூர்த்தி,முன்னாள் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், கவிஞர்நிரஞ்சன்பாரதி, சுத்த சன்மார்க்க நிலையத்தின் பொருளாளர் ஆசைத்தம்பி,ரெட்டி முரசு இளங்குமரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர், ஆசிரியர்ராமானுஜம், டாக்டர் சரவணன்,பார்வதிபுரம் சூரியமூர்த்தி, ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் முதல்வர்கள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ‘ வடலூர் பகுதிஅரசியல்வாதிகள்,வர்த்தகர்கள், பொதுமக்கள்,வடலூர் கருங்குழி, மேட்டுக்குப்பம், சீராங்குப்பம், சேப்பளாநத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர், நிறைவாக சுத்த சன்மார்க்க சங்க நிர்வாகி ராஜா வெங்கடேசன் நன்றி கூறினார்