Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

ஆன்மீகம்செய்திகள்

வடலூர் ஞானசபை மற்றும் தருமசாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 1 முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை

By tamilnewsmedia0
August 29, 2026 1 Min Read
0

வடலூர் ஞானசபை மற்றும் தருமசாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 1 முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை

கடலூர் மாவட்டம், வடலூர், திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஞானசபை மற்றும் தருமசாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 1 முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி வடலூர், திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையத்திற்கு வருகை தரும் பக்தர்கள் வரும் செப்டம்பர்1.ம் தேதி முதல் சபை மற்றும் சபையின் புனிதத் தன்மை மற்றும் அமைதியான சூழலை பேணும் வகையில், சபை மற்றும் தருமசாலைக்குள் செல்போன் (கைப்பேசி) கொண்டுவரதடை விதிக்கப்படுகிறது. தெய்வநிலையத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துச்செல்ல வசதியாக ஞானசபையின் முன் மண்டபத்தில் கைப்பேசி பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பக்தர்கள் கைப்பேசி 1க்கு ரூ.5மட்டும் கட்டணமாக செலுத்தி தங்களது கைப்பேசிகளை ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொள்ளவேண்டும்.
தரிசனம் செய்துவிட்டு திரும்பியதும், டோக்கனை காண்பித்து தங்களது செல்போனை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த உத்தரவை மீறி ஞானசபை மற்றும் தருமசாலைக்குள் மறைமுகமாக கைப்பேசியை கொண்டு சென்றால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அறநிலையத்தின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு தெய்வநிலைய நிர்வாகம் சார்பில் செய்தி குறிப்பில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

நேபாளத்தில் பயங்கரம், நடந்தது என்ன? முப்பது நிமிடங்களில் பேரழிவை ஏற்படுத்திய பனிப்பாறை ஏரி வெடிப்பு

Next

கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பெற்றோர் விழிப்புணர்வு, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme