Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

Blog

வடலூரில் கோயில் பூட்டை உடைத்து 10கிலோ வெள்ளி, வெண்கலப் பொருட்கள் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை

By tamilnewsmedia0
August 24, 2026 1 Min Read
0

வடலூரில் கோயில் பூட்டை உடைத்து 10கிலோ வெள்ளி, வெண்கலப் பொருட்கள் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை

வ
வடலூர் அருகே உள்ள கோயிலில் பூட்டை உடைத்து சுமார் 10கிலோ எடையுள்ள வெள்ளி மற்றும் வெண்கலப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடலூர் அருகே ஆபத்தானபுரம் – எல்லப்பன்பேட்டை செல்லும் வழியில் பெரியாண்டவர் கோயில் அமைந்துள்ளது
வெங்கடேசன் என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல நேற்று இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோயிலைப் பூட்டிச் சென்ற அவர் நேற்று முன்தினம் காலை மீண்டும் கோயிலைத் திறக்க வந்துள்ளார். அப்போது கோயிலின் முன் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, சுவாமிக்குச் சொந்தமான வெள்ளி குத்துவிளக்குகள் மற்றும் பல்வேறு வெண்கலப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த எடை சுமார் 10 கிலோ இருக்கும் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடலூர் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இக்கோயிலில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அம்மன் திருமாங்கல்யத்திலிருந்து 5 கிராம் தங்கச் சங்கிலியும், அதன்பின் உண்டியலை உடைத்துப் பணமும் திருடப்பட்டன. தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது, அப்பகுதி பொதுமக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

‘அம்பிகாபதி’எனும் அமர காவியம்

Next

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்களால் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது ஏராளமான பக்தர்கள் மக்கள் வழிபட்டனர்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme