ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பழமையானஅரிய 308 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு
தமிழ்நாடு அரசு
இந்து சமய அறநிலையத் துறை யின் கீழ் உள்ள திருக்கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளைத் திட்டிப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் நூலாக்கம் செய்யவும் “திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்கத் திட்டப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இச் சுவடித் திட்டப் பணி குழுவினர் கடந்த
06 – 03-2023 அன்று ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குக் கள ஆய்வுக்குச் சென்றனர். சுவடித் திரட்டுநர் பணிக்குழு திருக்கோயில் சுவடித்திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளரும் சுவடியியல் அறிஞருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்களின் ஆலோசனைப்படிகோயில் அறைகள் தோறும் பல மணி நேரம் சுவடிகள் உள்ளதா?என்று தேடினர்.
பின்பு பழைய கோப்புகள் வைக்கப்பட்டிருந்தஒரு பழைய அறைக்குள் பல ஆண்டுகள் பராமரிப்பு எதுவும் செய்யப்படாமல் பூச்சிகளும் பூஞ்சை களும் தூசுகளும் படிந்த நிலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகட்டுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவ்வாறு கண்டுபிடிக் கப்பட்ட ஓலைச்சுவடிக்கட்டுகளைச் சுவடித் திட்டப் பணிக்குழுவில் உள்ள சுவடி ஆய்வாளர்களும்
சுவடிப் பராமரிப்புக்குழுவினரும்நேரடியாகச் சென்று9 நாட்கள் அங்குத் தங்கியிருந்து முதலில் ஓலைச் சுவடிகளை முறையாகச் சுத்தம் செய்தனர். பின்பு புதிய நூல்கொண்டு ஓலைச்சுவடிகளை முறையாகக்கட்டி வைத்தனர். ஓலைச்சுவடிக்கட்டுகள் மொத்தம் 308 இருந்தமையினைக் கண்டுபிடித்தனர். அதோடு ஓலைச்சுவடிகள் தமிழ், கிரந்தம், தெலுங்கு, தேவநாகரி மொழியில் எழுதப்பட்டிருப்பதையும் அடையாளம் கண்டு உறுதி செய்தனர். ஒலைச்சுவடிக்கட்டுகளில் 25, 543 ஏடுகள் இருப்பதையும் எண்ணிக்கை செய்து உறுதி செய்தனர். மேலும் திருக்கோயில் சுவடிப் பணியாளர்கள்சுவடியில் உள்ள நூல்களின் பெயரையும் உரிய மொழி சார் வல்லூநர் முலம் கண்டறியும் பணியினையும் செய்து வருகின்றனர். அதோடுவிரைவில் சுவடிகள் பராமரிப்பு பணியும் நூலாக்கப் பணியும் தொடங்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.