பங்குனி உத்திர ஸ்பெஷல் உங்கள் “கஷ்டங்கள் பிரச்சனைகள் தீர” உங்கள் இல்லம் தேடி வருகிறார் முருகன்
திருமண வாழ்க்கைதான் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதுடன், அடுத்ததொரு செழுமையான தலைமுறைக்கும் வித்திடுகிறது. அறத்தைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது திருமண பந்தம்.ஆனால் சிலருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமண வரம் கைகூடுவதில்லை. இதற்கு முன்வினை பயன் என்றும், ஜாதக நிலையென்றும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அத்தகைய குறைகளைக் களையவும், தடைகளை அகற்றவும் வழியே இல்லையா? உண்டு. அவற்றில் ஒன்றுதான் பங்குனி உத்திர வழிபாடும், தரிசனமும்.
பங்குனி உத்திர தினத்தில் தான், அதிக தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகிறது. பங்குனி உத்திர விரதத்துக்கு முக்கிய சிறப்புகளில் இதுவும் ஒன்று.!
பங்குனி மாதத்தில் தமிழ்க்கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் பங்குனி உத்திரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. இந்த வருடம் பங்குனி உத்திர விழாவானது ஏப்ரம் மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திரம் நன்னாளில் இறைவனின் திருமணத்தை கண்டு வணங்குவது அனைத்து நலன்களையும் தரும். திருமணம் நடை பெறாதவர்களுக்கு வெகுவிரைவில் திருமண வரம் கிடைப்பதாக நம்பிக்கை. திருமணமானவர்கள் வாழ்வில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியான நிலை பெற பங்குனி உத்திர நாளில் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.
உத்தியோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையும், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.