வடலூரில்,எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்” பரப்புரைவாகனம்
“எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்” என்ற நிகழ்வு வருகின்ற மார்ச் 16 முதல் மார்ச் 21 ஆம் தேதிவரை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.
முதல் நிகழ்வாக:எண்ணும் எழுத்தும் திட்டத்தை பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கடலூர் மாவட்டத்தில் மார்ச் 17 ஆம் தேதி (17.03.2023) பரப்புரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் தொடக்கமாக, பரப்புரைக்குவாகனம் கடலூரில் அலங்கரிக்கப்பட்டு
முதல்நாள் கடலூரில் நேற்று வெள்ளிக்கிழமைபரப்புரையும், இரண்டாம்நாள்மயிலாடுதுறையிலும் மூன்றாம்நாள்கள்ளக்குறிச்சியிலும், நான்காம்நாள் விழுப்புரம் பரப்புரை
பரப்புரைகள் முடிந்ததும் வாகனம் தொடக்க இடத்திற்கு (கடலூர்) திரும்ப கிறது, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் ஒருவரும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திலுள்ள ஒரு பிரதிநிதியும் (பெலோஷிப்)
வாகனத்துடன் காலை 9.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்களிடம் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.இது
“எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்”
பரப்புரை வாகனம் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நிற்கும்போது, அந்த இடங்களுக்கு அருகாமையில் உள்ள தொடக்கப் பள்ளியிலிருந்து 1,2,3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் குறைந்தபட்சம் 3 மாணவர்கள் அந்த வாகனத்தில் ”என் மேடை“ யை பயன்படுத்தி மாணவர்கள், பேசுதல், உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தி,
பொது மக்களை கவர்ந்தனர்,
இரண்டாம் நிகழ்வாக, பள்ளிகளில், மார்ச், 20, 21ந்தேதிகளில்,1,2,3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடம் “எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகளை செயல்பாடுகள் மூலம் பெற்றோர்களிடம் விளக்குதல்” நிகழ்ச்ப அரசு பள்ளிகளில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக நேற்று வெள்ளிக்கிழமை, வடலூர் பஸ் நிலையத்தில், எண்ணும் எழுத்தும், கற்றலையும் கொண்டாடுவோம், நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியை குறிஞ்சிப்பாடி வட்டாரக் கல்வி அலுவலர், சரஸ்வதிலட்சுமி தலைமை, தாங்கிதுவக்கிவைத்தார், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், இளங்கோ, ராஜேஷ்குமார், சண்முகம், முத்து கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,இதில், கருங்குழி, பார்வதிபுரம், மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களின் அரசு பள்ளி மாணவ, மாணவிகள், கல்வித் திறமைகளான, மேடையில், பேசுதல், பொம்மலாட்டம், மாறுவேடம், ஆகிய திறமைகளை வெளிப்படுத்தினார்கள்,நிகழ்ச்சியில், வட்டார வளமையமேற்பார்வையாளர்கள், சீத்தா , மோகன், தலைமை ஆசிரியர்கள், அந்தோணி ஜோசப், மெட்டில்டா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், எண்ணும் எழுத்து, மாநில கருத்தாளர் லயோனா,, மற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்,