கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி விழா
விருதுநகர் மாவட்டம், எம்.ரெட்டியபட்டி, மல்லாங்கிணர், ஆர்.ஆர்.நகர் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் இன்று(14.03.2023) கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 1108 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 11,197 பயனாளிகளுக்கு ரூ.18.24 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 67 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 876 பயனாளிகளுக்கு ரூ.4.215 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு கடனுதவிகளை வழ்ங்கினார்