திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தி.சாருஸ்ரீ நேரில்ஆய்வு செய்தார்
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம், வக்ராநல்லூர் ஊராட்சியில் ரூ.33.04 லட்சம் மதிப்பீட்டில் பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருவதையும், ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் மதியஉணவு சமையல் கூடம் கட்டுப்பட்டுள்ளதையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேற்கூரையில் ரூ.1.77 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய செங்குத்து உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும்வக்ராநல்லூர் பகுதியிலுள்ள அங்கான்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு குறித்தும் மாணவர்களின் வருகை பதிவேடு மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் செயலி உள்ளிட்டவைகளையும், பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.9.48 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.0.125 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஊரகுழியினையும், ரூ.26.650 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டுப்பட்டுவரும் பூதமங்கலம் ஊராட்சி அலுவலகத்தினையும் ரூ.1.565 லட்சம் மதிப்பீட்டில் பூதமங்கலம் ஊராட்சி நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளையும் நூலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் புத்தகத்தினையும் நூலக வருகைப்பதிவேடு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
அதனைத்தொடர்ந்து சேரன்குளம் ஊராட்சி பகுதியில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.307.74 மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சாலை மேம்பாட்டு பணிகளையும் மரவாகாடுசித்தேரி ஊராட்சியிலுள்ள சமத்துவபுரத்தில் சமத்துவபுரம் 2021-22 திட்டத்தின் கீழ் தலா ரூ4.61 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுவரும் வீடுகளையும்ரூ.0.50 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகளின் மேம்பாட்டு பணிகளையும்ரூ.0.91 லட்சம் மதிப்பீட்டில் சித்தேரி பகுதியில் புனரமைக்கப்பட்டுவரும் அங்கான்வாடி மையத்தினையும் தொடர்ந்து சுந்தரக்கோட்டை ஊராட்சி பகுதியில் ரூ.11.65 லட்சம் மதிப்பீட்டில் அங்கான்வாடி மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருதையும், ரூ.18.12 லட்சம் மதிப்பீட்டில் சுந்தரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுவரும் பணிகளையும் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் மதியஉணவு சமையல் கூடம் கட்டுப்பட்டுள்ளதையும்;, ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிளேவர் பிளாக் சாலையினையும் சுந்தரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புனரமைக்கப்பட்டுவரும் கழிவறை பணிகளையும் இடையர்எம்பேத்தி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இல்லம் தோறும் குடிநீர் வழங்கும் இணைப்பு பணிகளையும் மாவட்ட கலெக்டர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்
இவ்ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா வருவாய் கோட்டாட்சியர் செல்விகீர்த்தனா மணி ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சடையப்பன்உதவி செயற்பொறியாளர்கள் சிவகுமார் ரங்கராஜன் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் சிவகுமார்உதவி பொறியாளர்கள் அன்புராஜன் மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்