நெய்வேலிஎன்.எல்.சி.க்கு ஏஜெண்டக செயல்படும் வேளாண்மை துறை அமைச்சரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,
குறிஞ்சிப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்
பேச்சி,
*ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விடமாட்டோம்*
*விவசாய சங்கம் மற்றும் அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி போராடுவோம்*
கையகப்படுத்திய பத்தாயிரம் ஏக்கர் நிலம் மீதி இருந்தும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நினைப்பது ஏன் என கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நீர் நிலம் விவசாயம் காக்க விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசியது கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனம் நிலக்கரி எடுக்க ஏற்கனவே 37ஆயிரம் ஏக்கர் அளவிற்கு நிலங்களை கையகப்படுத்தி நிலக்கரி எடுத்து வருகிறது இன்னும் மீதி நிலம் 10,000 ஏக்கருக்கு மேல் கரி எடுக்க வேண்டிய நிலங்கள் என்எல்சி இடம் உள்ளது. இப்படி இருந்தும் இன்னும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நினைப்பது ஏன். இன்னும் சில ஆண்டுகளில் என்.எல்.சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க போவதாக ஒரு திட்டமும் என்எல்சி இடம் உள்ளதாக தெரிகின்ற நிலையில் ஏன் விவசாய நிலத்தை அழிக்க நினைக்கிறார்கள் இதற்கு எல்ஐசி ஏஜென்ட் போல் என்எல்சிக்கு வேளாண்மை துறை அமைச்சரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் மாவட்டத்தை காக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் அவர்களும் துணை போவது ஏன் என கேள்வி எழுப்புகிறார். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நாங்கள் விடமாட்டோம் அனைத்து கட்சிகளையும் விவசாய சங்கங்களையும் ஒன்று திரட்டி நெய்வேலி என்எல்சியை பூட்டு போட கூட தயாராக இருப்போம் போராட்டம் நடத்தி விவசாய நிலங்களை காப்போம் கடலூர் மாவட்டத்தில் எட்டுஅடியில் இருந்த நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டது. வீராணம் ஏரியையும் கையகப்படுத்தி நிலக்கரி எடுக்கப் போவதாக என்.எல்.சி.யிடம் ஒரு திட்டமும் தீட்டி வருவதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால் தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக ஆய்வுகள் செய்து விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசினார்