நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 66 நாட்களுக்கு 27 அமர்வுகளுடன் நடைபெறும் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப். 13 வரையும் 2-வது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரையும் நடக்கிறது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இடைவெளி விடப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தின் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.