தஞ்சையில் இந்திய சுதந்திரத்தை பெற்ற முதல் பெண் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 293வது பிறந்தநாள் பெருவிழா
“
தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக வேலுநாச்சியாரின் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடியது தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம்
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்த முதல் பெண் மகாராணியான வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழாவையொட்டி தஞ்சை ரயிலடியில் தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம்
மாநில தலைவர் அருணா அஜிஸ் திருவுருவப்படத்துக்கு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்அப்பொழுது நிருபர்களுக்கு பேசியதாவது
வீரமங்கை இராணி வேலுநாச்சியார் இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் கி.பி. 1730ல் ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி – சாகந்தி முத்தாள் ஒரே மகளாகப் பிறந்தார். வேலுநாச்சியார் ஆண் வாரிசு போல் வளர்க்கப்பட்டார். பல மொழிகளையும் கற்றார். வாள்வீச்சு, ஈட்டி எறிதல் உள்ளிட்ட ஆயுதப் பயிற்சியும் பெற்றார்.
வீரமங்கை வேலுநாச்சியார் நம் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர்.
வீராங்கனை வேலுநாச்சியாரின் வீரம், விவேகம், உறுதிப்பாடு ஆகியவை சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.
இரணி வேலுநாச்சியார் பிறந்த மண்ணில் பிறந்த பெருமையும் அவர் இனத்தில் பிறந்த மகிழ்ச்சியும் எனக்கு உண்டு.
உலக வரலாற்றில் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை விரட்டியடித்த முதல் பெண்மணி மட்டுமல்ல, நாட்டு விடுதலைக்காக வெள்ளையர்களுடன் போரிட்டு வீரமங்கை இராணி வேலுநாச்சியார் வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ராணி வேலுநாச்சியாரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும், என்றும் அழியாது என அவர் கூறினார்.இதில்
, மாநில கொள்கை பரப்பு செயலாளர் டென்னிஸ் , மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் லயன்.தூதர்.டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் , நாஞ்சில் குணசேகரன் , தஞ்சை மாவட்ட தகவல் தகவல் தொழில்நுட்ப செயலாளர் குனா , ஒன்றிய பொருப்பாளர் விஷ்னு , மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.