குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கு சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா எச்சரிக்கை விழிப்புணர்வு
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கு சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா எச்சரிக்கை விழிப்புணர்வு
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது இளைஞர் ஒருவன் ரெக்சின் பேக்கை முதுகில் மாட்டிக் கொண்டு ID கார்டை கழுத்தில் போட்டுக்கொண்டு சுற்றித் திரிந்து கொண்டிருந்தான் அவனைக் கூப்பிட்டு குறிஞ்சிப்பாடி காவல்துறை சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா அவர்கள் அவனுடைய ரெக்சின் பேக்கை பரிசோதனை செய்த போது அதில் ஒரு புத்தகம் கூட இல்லாமல் காலியாக இருந்தது கல்லூரி படித்து வருகிறேன் என்று கூறினான் ஆனால் கல்லூரி படித்தால் ஒரு நோட்புக்காவது இருக்க வேண்டும் அதுவும் இல்லை இந்த இளைஞனிடம் பள்ளிக்கூடம் விடும் நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில் வந்து நின்று கொண்டு மாணவிகளிடம் ஆசை வார்த்தைகளை பேசி காதல் வலையில் சிக்க வைப்பதற்காக இது போன்ற செயல்களில் சில இளைஞர்கள் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. ஆகையால் பள்ளிகளை விட்டு வீட்டிற்கு செல்ல பேருந்து ஏற நிற்கும் மாணவிகளிடம் ரெக்சீன் பேக்கை திறந்து காண்பித்து சில இளைஞர்கள் நான் காலேஜ் படிக்கிறேன் நான் அப்படிப்பட்டவன் என்று ஏதாவது பேசி உங்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதல் வலையில் சிக்க வைத்து உங்களை திசை திருப்ப வாய்ப்பு அதிகமாக உள்ளதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களிடம் சிக்க வேண்டாம் என குறிஞ்சிப்பாடி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா அவர்கள் மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்