திருமணமான 4 நாளில் புதுப்பெண் விபரீத முடிவு; காரணம் என்ன!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளியான இவரது மகள் பிரியா (வயது 20). இவர், திண்டுக்கல் எம்.வி.எம். அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த இருசக்கர மெக்கானிக் கமலக்கண்ணன் (வயது 27) என்பவருக்கும் கடந்த 11-ஆம்தேதி திருமணம் நடந்தது. பின்னர் கூடலூரில் இருந்து அஞ்சுகுளிப்பட்டிக்கு மறுவீடு விருந்துக்கு புது மணதம்பதியினர் வந்திருந்தனர். இந்தநிலையில் பிரியா, வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது அருகே படுத்திருந்த மனைவியை காணாமல் தேடிய கமலக்கண்ணன், அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial