கான்பூரில் இருந்து வண்டலூருக்கு 19 விலங்குகள் வருகை!
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையாது உயிரியல் பூங்கா வண்டலூர் அறிஞர் அண்ணா வன விலங்குகளுக்கான சிறந்த இனப்பெருக்க திட்டங்களை கொண்டுள்ளது. குறிப்பாக கட்ட உடல் மலைப்பாம்பு, சருகுமான் மற்றும் நெருப்புக்கோழிகளை இனப்பெருக்கம் செய்வதில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இந்த விலங்குகள், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள உயிரியல் பூங்காக்களுடன் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வண்டலூர் பூங்காவுக்கும், கான்பூர்உயிரியல் பூங்காவுக்கும் இடையே விலங்குகளை பரிமாறிக் கொள்ள ரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிபோன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் 4 இனங்கள் கான்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து கடந்த 28-ம் தேதி வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன என வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.