பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை!
கேரளாவில் கடந்த 2022ம் ஆண்டு பாஜக ஓபிசி பிரிவு தலைவர் ரஞ்சித் சீனிவாசன் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மாவேலிக்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நிலையில் வழக்கு விசாரணை இன்று முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளிகள் என நிரூபணமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவேலிக்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து அவர்கள் 15 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.