வேலை நேரத்தை,12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழக அரசு, திரும்பப் பெற வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம்
வேலை நேரத்தை,12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழக அரசு, திரும்பப் பெற வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு கொண்டுவந்துள்ள 8 மணி நேர வேலையை,12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழக அரசு, திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை பாதுகாத்திடவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைசிறுத்தைகள்கட்சிகள், சார்பில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் 24/மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமையில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் கண்டனஉரை ஆற்றினர், மாவட்ட குழு உறுப்பினர் சிவகாமி,குறிஞ்சிப்பாடி பேரூர்அமைப்பு குழுசெயலாளர் மணி,வடலூர் நகர அமைப்புகுழு செயலாளர் இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், விவசாய சங்கமாவட்ட செயலாளர் சரவணன் ,ஒன்றிய குழு உறுப்பினர் மணிவண்ணன், வடலூர் நகர நிர்வாகி ஜோதிமணி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியசெயலாளர் அரிகிருஷ்ணன், வடலூர்அமைப்புக்குழு நிர்வாகிகள்நமச்சிவாயம்,முருகையன்,மணி, ராமலிங்கம், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பூவை.பாபு,விவசாயசங்கஓன்றியசெயலாளர் வெங்கடேசன், விவசாயதொழிலாளர் சங்க. ஒன்றிய துணைசெயலாளர் வாசு, வாலிபர் சங்க ஒன்றிய துணை செயலாளர் அன்பழகன், மாணவர் சங்கமாவட்ட குழு உறுப்பினர்அறிவழகன், கிளை செயலாளர்கள் விஜியகுமார், விவசாயசங்கரவி,குமரவேல் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்