வந்தவாசியில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் இன்று போகிப் பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் நடந்தேறியது. மாலை மாற்று வைபவம் நடைபெற்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஸ்ரீ ரங்கநாத பட்டாச்சாரியா மற்றும் சதீஷ் பட்டாச்சாரியா ஸ்வாமிகள் வைபவத்தை நடத்தினர். மேலும் உபயதார்களான டாக்டர் எஸ். குமார், டாக்டர் ஸ்ரீதரன் குடும்பத்தினர் பங்கேற்றனர்